டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் இன்புளுவென்சா ஆகிய நோய்த் தாக்கம் குறித்து வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடளாவிய ரீதியில் சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் இன்புளுவென்சா ஆகிய நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. 

இதனால் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

சிக்குன்குன்யா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுடன், சுமார் 16 வருடங்களுக்குப் பின்பு இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிக்குன்குன்யா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும், கர்ப்பிணி தாயொருவருக்கு சிக்குன்குன்யா வைரஸ் தொற்று ஏற்படுமிடத்து அது அவரது குழந்தைக்கும் தொற்றக்கூடிய அபாயம் உள்ளதாகச் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தற்போது பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகின்றமையால் உரிய வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியம் எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். 

தலை வலி, கை மற்றும் கால் வலி, காய்ச்சல் என்பன ஏற்பட்டால் உடனே உரிய வைத்தியரை நாடுமாறும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects