உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிக்கோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறவுள்ளது.
48 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில், 2022 ஆம் ஆண்டை விட 16 அணிகள் கூடுதலாகப் பங்கேற்கவுள்ளன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும்.
மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அந்தவகையில் இதுவரை, 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கண்டத்துக்கான F பிரிவு தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில், போர்த்துக்கல் – அங்கேரி அணிகள் மோதின.
இதில் போர்த்துக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.
அவர் 58 ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.
இதன்மூலம் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.
அவரும், குவாத்தமாலா நாட்டை சேர்ந்த கார்லோஸ் ரூயிசும் (Carlos Ruiz) தலா 39 கோல்கள் அடித்துள்ளார்.
மற்றொரு நட்சத்திர வீரரான (Lionel Messi) லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 36 கோல்கள் அடித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார்.
1000 கோல்களை அடிப்பதை இலக்காகக் கொண்டுள்ள ரொனால்டோ, போர்த்துக்கல் நாட்டுக்காக 223 போட்டியில் 141 கோல்கள் அடித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2ஆவது இடத்தில் உள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










