ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்பு பணிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15.09.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்பு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த நிலையில், இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவு 425 மில்லியன் ரூபாய் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், புதுப்பித்தலின் கீழ் ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பேருந்து நிலையத்தில் நிறுவப்படவுள்ளன.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கிடையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கையும் இன்று (15.09.2025) ஆரம்பமாகவுள்ளது.

புகையிரத நிலையத்தின் வரலாற்றுத் தன்மைக்கு பாதிப்பு விளைவிக்காத வகையிலும் அதன் பழமை தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects