மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையில் காணப்பட்ட கட்டடத்தொகுதி புனரமைக்கப்பட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரனினால் 27.10.2025 அன்று நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் இயங்கும் சுகாதார மேம்பாடு மற்றும் பிரச்சார பிரிவு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு, விசர் நோய் தடுப்புப் பிரிவு, சுகாதார தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளக கணக்காய்வுப் பிரிவு, தர முகாமைத்துவப்பிரிவு, தொழுநோய்ப் பிரிவு, பிராந்திய வாய் சுகாதார பிரிவு, திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு என்பன குறித்த கட்டடத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், PSDG 2025 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டடம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிராந்தியத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள் மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










