வாகனங்களை ஒழுக்கமாக ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமங்களுக்கு அபராதப் புள்ளி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன் பிரகாரம், 2026 ஆம் ஆண்டு முதல் ஓட்டுநர் உரிமங்களுக்குக் குறைபாடுள்ள புள்ளிகள் முறை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை அடையாளம் காண இப் புதிய வழிமுறை உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்றும் போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










