நானுஓயா மற்றும் பதுளை இடையிலான புகையிரத சேவை குறித்து வெளியான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நானுஓயா மற்றும் பதுளை இடையிலான புகையிரத சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத தண்டவாளங்கள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதற்கமைய, சேதமடைந்த புகையிரத மார்க்கம் மற்றும் புகையிரத பாலங்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், தொடர்ச்சியான புனரமைப்பு பணிகளுக்கு மத்தியில் பதுளை மற்றும் அம்பேவல வரையான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects