பேருந்துகள் செல்லும் வழியை அறிந்துகொள்ள தென் மாகாணத்தில் அறிமுகமாகியுள்ள புதிய செயலி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தென் மாகாணத்தில் இயங்கும் பேருந்துகள், தற்போது இருக்கும் இடம் மற்றும் அவை பேருந்து நிலையங்களுக்கு வரும் நேரத்தை பயணிகள் நேரலையில் (Live) அவதானிக்கக்கூடிய புதிய கைபேசி செயலி 21.01.2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

‘SP Bus’ என பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியை, மாத்தறை பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற

உறுப்பினர் அஜந்த கம்மெத்தகே (Ajantha Gammeddage) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பயணிகள் தாங்கள் எதிர்பார்க்கும் பேருந்து தற்போது எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை வரைபடத்தின் (MAP) மூலம் நேரலையில் பார்க்கலாம்.

அத்துடன், குறிப்பிட்ட பேருந்து தரிப்பிடத்துக்கு,பேருந்து வருவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.

இதனூடாக ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்து சேவை இயங்குகிறதா இல்லையா என்பதைப் பயணிகள் வீட்டை விட்டு வெளியேறாமலேயே அறிந்து கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தென் மாகாணத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, பொதுமக்கள் தங்களது நேரத்தையும் பயணத்தையும் முறையாகத் திட்டமிடுவதற்கு இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேக பேருந்துகள் முதல் சாதாரண வழித்தட பேருந்துகள் வரை அனைத்தையும் இந்தச் செயலி மூலம் கண்காணிக்க முடியும் என்பது பயணிகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects