வட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வட்ஸ்அப் நிறுவனம் தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில், மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாக குரல் மற்றும் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், இதுவரை கணினி செயலிகளில் (Desktop App) மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த அம்சம், தற்போது பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்டோஸ் அல்லது மெக் செயலிகளைப் பயன்படுத்தாத லினக்ஸ் போன்ற இயங்குதளப் பயனர்களும், உலாவிகள் மூலமாகவே தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் அரட்டைகளின் மேல் பகுதியில் இதற்கான பிரத்தியேக ஐகன்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், காணொளி அழைப்பின் போது கணினித் திரையைப் பகிரும் (Screen Sharing) வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, அலைபேசி மற்றும் கணினி செயலிகளைப் போலவே இந்த இணைய உலாவி அழைப்புகளும் ‘End-to-End Encryption’ முறையில் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.

பயனர்கள் வட்ஸ்அப் வெப் தளத்தில் உள்நுழைந்து செய்து, தமக்குத் தேவையான நபரின் தொடர்பை திறந்து, கேமரா மற்றும் மைக்ரோஃபோன் அனுமதிகளை வழங்குவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

தற்போது தனிநபர் அழைப்புகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் 32 பேர் வரை பங்கேற்கக்கூடிய குழு அழைப்புகளுக்கும் விரிவாக்கப்படவுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளைத் தடுத்தல் மற்றும் இணைப்புகளின் முன்னோட்டத்தைத் தவிர்த்தல் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் வட்ஸ்அப் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects