ரஜரட்ட பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத பற்றாக்குறை நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாகவும் அதன் முகாமைத்துவ பீட மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதன் தலைவர் திலிண நிரோஷ் சுட்டிக்காட்டுகையில், முகாமைத்துவ பீடத்தில் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி பயின்ற போதிலும், அவர்களுக்குக் கற்பிப்பதற்கு 12 பேராசிரியர்கள் மாத்திரமே உள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

“ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் தற்போது 45 சதவீத விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குத்  பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள பிரதான பிரச்சினை யாதெனில், ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு பேராசிரியர்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது.

இதனால் மாணவர்களின் ஆய்வுப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் 6 துறைகளிலும் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அவர்கள் அனைவருக்கும் தற்போது 12 பேராசிரியர்கள் மாத்திரமே உள்ளனர்.” என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects