2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேநேரம் நான்காம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளனர்.கொழும்பு ரோயல் கல்லூரிமற்றும் கம்பஹா ஹோலி கிராஸ் கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு மாணவருமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
13,588 மாணவர்கள் ஒன்பது பாடங்களுக்கும் ஏ சித்தி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇