செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய MRI இயந்திரம் ஒன்று, முதன்முறையாக அரச வைத்தியசாலை ஒன்றில் 09.03.2026 அன்று ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இந்த நவீன இயந்திரத்திற்காக அரசாங்கம் 450 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது.
குறித்த நவீன MRI இயந்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இது நோயாளர் நலன்புரி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறான அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட MRI இயந்திரம் ஒன்று இலங்கையின் அரச வைத்தியசாலை ஒன்றில் நிறுவப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு மற்றும் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவுகளின் சேவைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்கனவே உள்ள மூன்று MRI இயந்திரங்களும் அவ்வப்போது செயலிழந்த காரணத்தினால் நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள மூன்று இயந்திரங்களுக்கு மேலதிகமாக இந்த அதிநவீன இயந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










