நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையும், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










