79ஆவது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜெனிவா, சுவிட்சர்லாந்து – உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமானது இதில் 194 நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.

“ஆரோக்கியத்திற்காக ஒரே உலகம்” (One World for Health) என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, சிறுவர் புற்றுநோய் தொடர்பான விசேட அமர்வு நடைபெற்றது.

இந்த விசேட அமர்வில் உரையாற்றிய இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,

2030ஆம் ஆண்டிற்குள் சிறுவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வு விகிதத்தை குறைந்தது 60% ஆக உயர்த்துவதற்கு உலகளாவிய சுகாதாரத் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சிறுவர் புற்றுநோய் குறித்த “Measuring survival, driving change” என்ற புதிய அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.

வரலாற்றில் முதன்முறையாக, லுகேமியா (Lymphoid Leukaemia) நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதங்கள் நாடுகள் மட்டத்தில் இந்த அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளன.

புற்றுநோயிலிருந்து மீண்ட சிறுவர்கள் ஆரோக்கியமான, கௌரவமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வாழ்க்கையை வாழ்வதை உறுதிப்படுத்துவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு ‘அனைவருக்கும் இலவச சுகாதாரம்’ என்ற கொள்கையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதற்கு அது பலமான அடித்தளமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு இதயக் கோளாறுகள், மனநலப் பிரச்சினைகள் மற்றும் கற்றல் குறைபாடுகள் போன்ற நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதைக் கையாள பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் சமூக மட்டத்திலான ஒரு ஒருங்கிணைந்த பராமரிப்பு முறை அவசியம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உள்ள சிறுவர் புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள் மற்றும் ‘ஆரோக்கிய மையங்கள்’ (Arogya Wellness Centers) ஊடாக, சிறுவர் பருவத்திலிருந்து முதிர்வயது வரை தொடர்ச்சியான பராமரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மாநாட்டின் தலைவராகவும் செயற்படும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects