உயர்கல்விக் கொள்கையில் புதிய சீர்திருத்தம் – பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

முன்மொழியப்பட்ட உயர் கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பை தயாரிப்பதற்காக பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டலின் கீழ், உயர் கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் தற்போது நிபுணர் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளை உள்ளடக்கி, பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான பல சுற்று விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டுள்ளன.

இதற்கு இணையாக, இது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, உயர்கல்விக்கான முன்மொழியப்பட்ட தேசிய கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான ஒரு கேள்வித்தாள் அமைச்சகத்தின் இணையதளத்தில் https://mohe.gov.lk/survey.htmlசேர்க்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதனை அணுகி தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects