ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (24.06.2026) மேற்கொள்ளப்படவிருந்த 24 மணித்தியால நீர் விநியோகத் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், சில இடங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை (24) இரவு 8.00 மணி முதல் நாளை மறுதினம் (25) இரவு 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பாதுக்கை, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை, மஹரகம பகுதிக்கு நீர் விநியோகம் இடம்பெறும்.
கலடுவாவவிலிருந்து பொரலஸ்கமுவ வரை நீர் விநியோகிக்கும் பிரதான விநியோகக் குழாய்க்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தலை புறக்கணிக்குமாறு வேண்டும் என்றும் அச்சபை கோரியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










