ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் தோற்றிய மாணவர்களுக்கான Child action Lanka நிறுவனத்தின் ஊடாக நடாத்தப்பட்ட திறன் சார் கற்கை நெறியின் நான்கு மாத கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் கோ. தனபாலசுந்தரமின் ஆலோசனையின் கீழ் கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன் தலைமையிலும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர்.எம்.றுசைட் ஏற்பாட்டிலும் மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர் திருமதி அஃப்ரா வக்கீல், உதவி சுகாதார வைத்தியர் திருமதி.ஹஸ்மத் சியாம், மாவட்ட NGO ஒருங்கிணைப்பாளர் சுதர்ஷன் ஆகியோரும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிறுவனமானது முற்றிலும் இலவசமாக 20 மாணவர்களுக்கான கற்கை நெறியினை வழங்கியதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇