எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் நிறைவேற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பரீட்சை தொடர்பான அட்டவணைகள், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரவேசித்து அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇