முட்டை விலை அதிகரிப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஒரு முட்டை 42 ரூபா முதல் 45 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவிய கடும் மழை மற்றும் காலநிலை மாற்றங்களினால் முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. முன்னர் சுமார் 80 சதவீதமாக இருந்த கோழிப்பண்ணைகளின் உற்பத்தித் திறன் தற்போது 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

கோழித் தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படும் சோளம் உட்பட மூலப்பொருட்களின் விலைகள் அண்மையில் அதிகரித்துள்ளதால் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரிகள் தமது உற்பத்தித் தயாரிப்புகளை ஆரம்பித்துள்ளதால் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இது செயற்கையான விலை ஏற்றம் அல்லவென்றும், வழங்கல் மற்றும் கேள்வி அடிப்படையிலேயே விலை அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தொடரக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects