நூலக சேவையைப் பசுமைமயமாக்குதல் தொடர்பான செயலமர்வு!

நூலக சேவையைப் பசுமைமயமாக்குதல் மற்றும் நூலக அமைப்பு ஊடாக சிறுவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொதுமக்களின் சுற்றுச்சூழல் அறிவு, மனப்பான்மைகள் மற்றும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு விசேட சுற்றுச்சூழல் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் இலங்கை நூலக சங்கமும் இணைந்து இந்த விசேட சுற்றுச்சூழல் செயலமர்வை இன்று (18.11.2026) ஏற்பாடு செய்திருந்தன.

நூலகர்களுக்காக நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் நாடு முழுவதிலுமிருந்து 100 க்கும் மேற்பட்ட நூலகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, தேசிய சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்காக நூலகங்கள் ஊடாக ஆற்றக்கூடிய பங்குபற்றுதல் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நூலக சேவையைப் பசுமைமயமாக்கிக் கொள்ளக்கூடிய முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects