ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2026.11.15 ஆம் திகதி முதல் 2026.11.19 ஆம் திகதி வரை நடைபெறும் வருடாந்த உலக பொலிஸ் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, துபாய் பொலிஸ் மற்றும் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதித் தலைவர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் சமஷ்டிப் பொலிஸ் சபையின் தலைவர் மற்றும் இணை உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் தாஹி கல்ஃபான் தமிம் (Dhahi Khalfan Tamim) உள்ளிட்ட அந்நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்துள்ள ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் (United Nations Office on Drugs and Crime – UNODC) சிரேஷ்ட அதிகாரியான சிரி பிஜூன் (Siri Bijune) மற்றும் துபாய் பொலிசின் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரும் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்த பாதுகாப்புத் துறை அதிகாரிகளில் அடங்குகின்றனர்.

இலங்கையிலிருந்து தப்பிச்சென்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதற்கும், நாடு கடத்துவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கிவரும் இராஜதந்திர ஒத்துழைப்புத் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் குறித்த அதிகாரிகளுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் கௌரவத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புகளில் பொலிஸ்மா அதிபருடன் இலங்கை பொலிசைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்டவும் மேற்படி அனைத்து சந்திப்புகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects