பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டில் வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அதில் எந்தவித உண்மையும் இல்லையென அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களைப் பற்றி சிந்தித்து பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇