2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று 24.01.2024 கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், விடைத்தாள்களை திருத்தம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குமாறு அமைச்சுப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக மேலும் குறிப்பிட்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇