நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது வருடாந்த நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் வருடாந்த நிதி அறிக்கையுடன் வௌியிடப்படவுள்ள கணக்காய்வாளரின் சாராம்ச அறிக்கையை குறித்த நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த கணக்காய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 3 மாதங்கள் போதுமானது. வருடாந்த நிதி அறிக்கையுடன் வௌியிடப்படவுள்ள கணக்காய்வாளரின் சாராம்ச அறிக்கை, மே 31ஆம் திகதிக்கு முன்னதாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇