(31.01.2024) அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம் , பெற்றோல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
பெற்றோல் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.
மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.
சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
லங்கா ஐஓசி எரிபொருட்களின் புதிய விலைகள்,
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 368 ரூபா.
ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 456 ரூபா.
ஒட்டோ டீசலின் புதிய விலை 360 ரூபா.
சுப்பர் டீசலின் புதிய விலை 468 ரூபா.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇