மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனால் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் 09.07.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“எமது காலம்” எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக தேவநாயகம் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியில் பயணிக்கும் அருங்காட்சியகத்தை காட்சிப்படுத்தும் 4 ஆவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புராதன நாகரிகம் மற்றும் அவர்களின் தொழில் நுட்பங்களை இலகுவான முறையில் அறிந்து கொள்வதற்கும் ஆதி வரலாற்றை புரிந்து கொள்வதற்கான ஒரு களமாக இக் கண்காட்சியகம் அமைந்துள்ளதுடன் சமாதானம், சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியா ஏழு நாட்கள் இக்காட்சியகத்தினை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் அருங்காட்சியகத்தினை அதிகளவான பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பயன் பெற்றனர்.
இந் நிகழ்வில் 243 வது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, ஸ்கோப் நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் சுஜன் நாணயக்கார, Search for Common Ground நிறுவன தேசிய பணிப்பாளர் நவாஸ் மொஹமட், கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ், தொழில் நுட்ப தலைமை உதவியாளர் மொஹமட் மாஹிர், வலகய கல்வி பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇