கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த 07.10.2023 மற்றும் 08.10.2023 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்றது.
பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப நிகழ்வின்போது அதிதிகள் மற்றும் பட்டம் பெறயிருந்த மாணவர்கள் உள்ளிட்டோர் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மூன்று அமர்வுகளாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் 1649 உள்வாரி மாணவர்களும், 55 பட்டபின்படிப்பு மாணவர்களும், 56 வெளிவாரி மாணவர்களும் அடங்கலாக 1760 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் இப்பட்டமளிப்பு விழாவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமை தாங்கியதுடன் பட்டதாரிகளுக்கு பட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇