ஒவ்வொருவரும் தனது குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா, 1994 ஆம் ஆண்டிலிருந்து மே 15ஆம் திகதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் இடம்பெயர்ந்தோர், குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 21,40,00000 பேர் வாழ்வாதரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பங்களுடைய வாழ்க்கை இவர்களை சார்ந்து உள்ளன. என்ன தான் இவர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஒருவித ஏமாற்றமாகவே இருக்கும்.
எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும் யாரும் தனது குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள் பற்றி குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2024 சர்வதேச குடும்ப தினத்தின் தீம் ‘குடும்பங்கள் மற்றும் காலநிலை மாற்றம்: குடும்பத்தின் சர்வதேச ஆண்டு + 30’ என்பதில் கவனம் செலுத்தும். நமது காலத்தின் மிக முக்கியமான பிரச்சினையான காலநிலை மாற்றம் குடும்பங்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் காலநிலை நடவடிக்கையில் அவர்கள் வகிக்கும் பங்கு குறித்து இந்த நாள் கவனம் செலுத்தும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇