தற்போது நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் பல சுற்றுலாத்தலங்கள் விலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் காலி கோட்டையில் அதிகமான கட்டாக்காலி விலங்குகள் திரிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் 135,907 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இம் மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 61,767 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇