இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதனின் வழிகாட்டலில் வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையில் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் முன்னெடுத்த குருதிக்கொடை முகாமானது போரதீவுப்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் (05.02.2024) அன்று இடம்பெற்றது.
இக் குருதிக்கொடை முகாமில் மட்டக்களப்பு பிராந்திய இரத்த வங்கி வைத்திய அதிகாரி , இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இளைஞர் யுவதிகள், பொது மக்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇