நாட்டின் சில பகுதிகளில் இன்று (17.10.2025) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழைபெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இந்த நிலையில், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










