மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் 18.07.2025 அன்று விஜயம் மேற்கொண்டனர்.

வைத்திய உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர் பிரச்சினைகளுக்கான ஆலேசனைகளையும் வழங்கினார்.

இதன் போது வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் மாவட்டத்தில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையினால் நோயாளர்கள் தமது சிகிச்சையினை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான தெளிவூட்டல்களை பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் அளிக்கையின் மூலம் விளக்கங்கள் வழங்கியதுடன் மாவட்டத்தில் காணப்படும் சுகாதார சேவைக்குரிய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தை அமைத்தல், வைத்தியசாலைகளை தரம் உயர்த்துதல் மற்றும் வாகனங்கள், போக்குவரத்து பிரச்சினை போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் திசாநாயக்க கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் என பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் பாதீட்டில் சுகாதார துறைக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் எனவும், வைத்திய சேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டினர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects