மரக்கறிகளின் இன்றைய விலை நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுமார் பத்து வருடங்களின் பின்னர் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வகையான மரக்கறி வகைகளின் விலைகளும் சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.

நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 130 ரூபாய் முதல் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சீனா பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 250 ரூபாய் முதல் 270 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையும், யாழ்ப்பாண சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் வெள்ளை பூடு கிலோ ஒன்று 450 ரூபாய் முதல் 470 ரூபாவாக இன்றைய (05.04.02024) மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects