கோறளைப்பற்று மத்தி ஓட்டமாவடி கிழக்கு சமூர்த்தி வங்கி 2022ம் ஆண்டு நஷ்டம் அடைந்து வங்கி 2023 ஆம் ஆண்டு மூன்று கோடி மேற்பட்ட நிதியை இலாபமாக பெற்றமைக்காக சிறப்பாக செயல்பட்ட உத்தியோகத்தர்களையும் வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு சிரேஷ்ட தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம் பசீர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் பிரதம அதிதியாகவும் எம்.ஏ.சி.றமீஸா உதவிப் பிரதேச செயலாளர் எச்.எம்.ருவைத், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், எம்.ஏ.எம் தாஹிர் நிர்வாக உத்தியோகத்தர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர் .
மேலும் வங்கியின் ஞாபகார்த்த சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇