டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
86 வயதான ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வலம் வந்தார். பிரபல தொழிலதிபரான இவர் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் கடமையாற்றினார்.
அவரது சேவைப் பணி மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக அனைவராலும் பரவலாக அறியப்பட்டவர்.
இந் நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரினை சூட்டப்படுவதாக அம் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் குறித்த பல்கலைக்கழகம் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇