2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராம் சிலிண்டர் 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் சிலிண்டர் 1,482ரூபாவிற்கும், 2.3 கிலோ கிராம் சிலிண்டர் 694 ரூபாவிற்கும் விற்றபனை செய்யப்படுகிறது.
இதே வேளை, ஜூலை மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், லாஃப்ஸ் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 4,100 ரூபாவிற்கும், 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










