மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை வினைத்திறனாக முன்னெடுக்கும் செயற்திட்டம் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் இன்று (07.01.2025) மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் எஸ்.தனஜெயன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வாவி பெருக்கெடுத்ததன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியை அண்டிய பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி காணப்பட்டன.

இதனால் சுற்றாடல் அசுத்தமாக்கப்பட்டதுடன், இதனை அண்டிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் உயிர் வாழும் மீன் இனங்கள் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளும், அவற்றை உண்பதால் அவைகளும் மேலும் பாதிப்படைந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் நகரைச் சுத்தப்படுத்தும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது மாநகர சபையின் ஊழியர்கள் , சுகாதார தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects