மட்டக்களப்பு மாவட்டத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமான AMCOR நிறுவனத்தின் ஏற்பாட்டில், ICMPD நிறுவனத்தின் நிதி அனுசரணையில், “பாதுகாப்பான, முறையான மற்றும் சட்டரீதியான புலம்பெயர்வை உறுதிசெய்தல்” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த கருத்தரங்குகள், செட்டிபாளையம் மகாவித்தியாலயம் மற்றும் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் 8, 9, 10 மாணவர்களுக்காக 08.03.2025 அன்று நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு புலம்பெயர்வு தொடர்பான முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் சி. சிறிதரன், AMCOR நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பரமசிவம் முரளிதரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் கவியரசன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அதிகாரி எஸ். ராஜசேகரன், AMCOR நிறுவன கள உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கு முடிவில் பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளரினால் பயிற்சி பற்றிய மீளாய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1400 மாணவர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பு ஆகிய கல்வி வலயங்களிலிருந்து இதுவரை 984 மாணவர்களுடன் 15 பாடசாலைகளில் இத் திட்டம் நிறைவடைந்துள்ளது. மிகுதி 416 மாணவர்களும் மேலதிக பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதனால், புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதன் சட்டரீதியான வழிமுறைகள் பற்றி மாணவர்கள் அதிகமான தெளிவை பெற்றுள்ளனர்.



















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










