அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (21. 07.2025) நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம், தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக அச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக இன்று (21. 07.2025) மீளாய்வு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










