நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமாக இருந்தால், வாக்களிக்க செல்லும் போது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர்,
”வாக்காளர் ஒருவருக்கு தனக்கான வாக்களிப்பு நிலையம் தெரியுமாக இருந்தால், உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனுமொரு ஆவணத்தை வைத்து உங்களால் வாக்களிக்க முடியும்” என்றார்.
மேலும், ”உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இருக்கும் போது வாக்களிப்பு நிலையம் மற்றும் எண் ஆகியவற்றை அடையாளம் காண வசதியாக இருக்கும். ஆனால் வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றி அச்சம் கொள்ள வேண்டாம். வாக்காளர் அட்டை வாக்களிப்பதற்கு ஒருபோதும் தடையாக இருக்காது” எனவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇