தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025.05.06 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களால் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்ய அல்லது முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன் படி, தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 7 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும். 

அலுவலக நாட்களில் எந்தவொரு நபரும் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை அவற்றின் நகல்களைப் பரிசோதிக்கலாம். 

இத் தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 6 இன் படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects