வனவிலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விரிவான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், சிறுத்தைகள் மற்றும் மயில்கள் மனிதக் குடியிருப்புகளுக்குள் செல்வதால் சொத்து சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆலோசனைகளுடன் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சு இத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
இந்தத் திட்டத்தைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சரின் தலைமையின் கீழ் விசேட அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழு புதிய பரிந்துரைகளை முன்வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










