பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுடன், தான் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஸ்கொட்லாந்தின் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்காக இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அவருக்கு, இது ஐந்தாவது பிரசன்னமாகும்.
2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் அறிமுகமாகி இருந்தார்.
2012ஆம் ஆண்டில் லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதுடன், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇