பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் , தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளையும் இந்த இலக்கத்திற்கு வழங்க முடியும்.
வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை சிறப்பு குழுவின் கீழ் இடம்பெறும்.
அதேநேரம், போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇