பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், கொழும்பு கோட்டையிலிருந்து நீர்கொழும்பு மற்றும் வெயாங்கொடைக்கு தலா இரண்டு ரயில்களும், பொல்கஹவெலயிலிருந்து கோட்டைக்கு இரண்டு ரயில்களும், காலியிலிருந்து கோட்டைக்கு மூன்று ரயில்களும், அளுத்கமவிலிருந்து கோட்டைக்கு ஒரு ரயிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் சட்டவிரோதமானது, இதன் காரணமாக பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇