பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அச்சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 29 ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய, பாததும்பர, அக்குரன, குண்டசாலை பிரதேச செயளாலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள், ரஜவெல்ல, சிறிமல்வத்தை , அம்பிட்டிய, ஹன்தான மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇