டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CBL குழுமம் (CBL Group)100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது.
அதற்கான காசோலையை CBL குழுமத்தின் (CBL Group) குழும பணிப்பாளர் ஆர். விக்ரமசிங்க 18.12.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் CBL குழுமத்தின் (CBL Group) குழும பணிப்பாளர் திருமதி என். விக்ரமசிங்க மற்றும் பணிப்பாளர் /பிரதான நிறைவேற்று அதிகாரி ரந்தீவ மலலசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










