கடந்த வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்துவதற்காக முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் ஆனது மட்டக்களப்பு மாவட்ட ஒன்றிணைந்த இளைஞர் அபிவிருத்திக் குழுவுடன் இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி சஐலெட்சுமி ஜெயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முனைப்பு சுவிஸ் கிளை தலைவர் மாணிக்கபோடி குமாரசாமி, முனைப்பு ஸ்ரீ லங்கா தலைவரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மாணிக்கப்போடி சசிகுமார் முனைப்பு ஸ்ரீ லங்கா பொருளாளர் அ.தயானந்தரவி மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇