தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக 10.08.2025 அன்று முதல் ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுடுல்ல தேசிய பூங்காவில் 09.08.2025 அன்று காணப்பட்ட நீண்ட வரிசைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் , இவ்வாறான பின்னணியில் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










