மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டம் 17.03.2025 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கூட்டத்தில், கடந்த காலாண்டில் சிறுவர், மகளிர் மற்றும் உளவளத்துணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் பற்றி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன் உரை நிகழ்த்தினார். இந்த உரையில், பிரதேச செயலக பிரிவில் சிறுவர்கள் மற்றும் மகளிர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும், கல்வி, சுகாதாரம் உட்பட பல திணைக்களங்கள் சார்பில் சிறுவர்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. சிறுவர் இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய தலைப்புகள் ஆக இருந்தன.

பிரதேச செயலாளர், எதிர்காலத்தில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, சமுதாய மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினரால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects