விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்று முதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக விவசாயிகளுக்கு, உரத்துக்கான கொடுப்பனவு வவுச்சர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.
அந்த முறைமையில் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்திற்கொண்டு உரத்துக்கான கொடுப்பனவுகளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇